கோவளம் ஊராட்சியில் மாணவர்கள் இன்ப சுற்றுலா

63பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் நான்காம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 980 மாணவர்களை ஒருங்கிணைத்து இன்ப சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. கோவளம் ஊராட்சி மன்றமும் எஸ். டி. எஸ். பவுண்டேஷன் நிறுவனமும் இணைந்து ஆண்டுதோறும் பள்ளி மாணவ மாணவியர்களை ஒருங்கிணைத்து இன்ப சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். 

மூன்றாம் ஆண்டாக இன்ப சுற்றுலா பயணத்தை இரண்டு நிர்வாகமும் ஏற்பாடு செய்த நிலையில் மாணவ மாணவியர் பெற்றோரின் ஒப்புதலோடு பூந்தமல்லி அருகே உள்ள குயின்ஸ் லேண்ட் சுற்றுலா மையத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. சுற்றுலா பயணத்தை கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் ஷோபனா தங்கம் மற்றும் எஸ்.டி.எஸ். பவுண்டேஷன் நிறுவனர் சுந்தர் ஆகியோர் கொடி அசைத்து சுற்றுலா பயணத்தை தொடங்கி வைத்தனர். 

ஒரு நாள் முழுவதும் அவர்களுக்கு தேவையான உணவினை வழங்கி ஒரு நாள் பொழுதை இனிதே கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவ மாணவியரின் பாதுகாப்பிற்கும் அவர்களை ஒருங்கிணைக்கவும் 200 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை கொண்டு மொத்தம் 1200 பேர் என குழுவை ஒருங்கிணைத்து பயணம் மேற்கொண்டதாக ஊராட்சி மன்ற தலைவர் ஷோபனா தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி