காஞ்சிபுரம் கீரை மண்டபம், ஆலடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் குமார். இவர், நேற்று முன்தினம் (பிப்.21) மாலை வீட்டு வாசல் முன், ஹாண்டா டியோ இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார். நேற்று காலை பார்த்தபோது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. வீட்டின் அருகே கடையில் இருக்கும் 'சிசிடிவி' காட்சி பார்த்தபோது, ஹெல்மெட் அணிந்த மர்ம ஆசாமி ஒருவர், இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. விஷ்ணு காஞ்சி போலீசார் தேடி வருகின்றனர்.