கிளாம்பாக்கத்தில் ராட்சத இயந்திரங்கள் மூலம் தூய்மை பணி
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்துள்ள, கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து முனையத்திற்கு தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளும், வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய விடுமுறை நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயணிகளும், பண்டிகை நாட்களில் இன்னும் அதிகமாகவும் வந்து செல்கின்றனர். தற்போது , பெய்து வந்த மழை மற்றும் காற்றினால் பேருந்து முனைய, முகப்பில் உள்ள கண்ணாடி ஜன்னல்களில் தூசிகள் மற்றும் மழையால் ஈரப்பதம் இருந்தது. அதை துடைத்து சுத்தம் செய்ய வேண்டி, சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் உத்தரவின் படி ராட்சத இயந்திரம் வாயிலாக தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இதை பேருந்து முனையம் வரும் பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.