செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தண்டலம் ஊராட்சியில் உள்ள செல்லியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பிரியன்- ஜானகி என்கிற பிரின்சி தம்பதியருக்கு ஜோயல் என்ற 4 வயது மகனும் , ஸ்கைலா என்ற இரண்டரை வயது மகளும் உள்ளனர். இவர்களது மகன் ஜோயல் தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் UKG படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து வேனில் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அந்த சிறுவனை இறக்கி விடுவதற்காக வேன் அவர்களின் வீட்டு வாசலில் நின்றுள்ளது. மகனை அழைத்து செல்வதற்காக மகனின் அம்மா வந்துள்ளார். அம்மா உடன் சேர்ந்து ஸ்கைலா என்ற இடண்டரை வயது பெண் குழந்தையும் வந்துள்ளது.
சிறுவன் இறங்கியதும் பள்ளி வாகனம் புறப்பட்டுள்ளது. பின்னால் நின்று கொண்டிருந்த குழந்தையை பார்க்காமல் வாகனத்தை ஓட்டுனர் இயக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது இரண்டரை வயது ஸ்கைலா என்ற பெண் குழந்தை தலையில் பின் சக்கரம் ஏறி உள்ளது.
இதனால் அந்த பெண்குழந்தை சம்பவ இடத்திலிலே பரிதாபமாக பலியாகி உள்ளது உடனே தாய் மற்றும் அங்கு இருந்த பொதுமக்கள் குழந்தையை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.