செங்கல்பட்டு தெற்கு மாவட்ட திருப்போரூர் தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக சட்டமன்ற குழு உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்; விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு பாஜக, பாமக கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லையா என கேள்வி எழுப்பியதற்கு, விசிக மாநாடு என்பது அவர்கள் குடும்ப விழா. அவர்கள் குடும்ப விழாவில் யார் யார் கலந்து கொள்ள வேண்டும் என அவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். எங்களுக்கு அழைப்பு இல்லை என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பிய போது, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம். அவரது கட்சிக்கும் எங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. நாங்கள் புதிய உத்வேகத்தோடு வருகின்ற 2026 ல் களமிறங்குகிறோம் அதில் வெற்றி பெறுவோம் என்றார்.