தலைமை தபால் நிலையம் முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
மத்திய அரசை கண்டித்து செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் பொண்ணுராம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தொழிலாளர் வர்த்தகம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக ரத்தம் சிந்தி தியாகிகள் பல செய்து போராடி வென்றெடுத்த 44 தொழிலாளர்களின் சட்டங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதை கண்டித்தும் மத்திய மோடி அரசால் நான்கு தொகுப்புகளாக திருத்தப்பட்ட இந்த சட்டத்தை கண்டித்து மாபெரும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி