செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி அடுத்த பிள்ளையார் கோவில் தெருவில் ராம் தேவி என்கிற கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த விற்பனை நடைபெறுவதாக மறைமலைநகர் நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற சுகாதார ஆய்வாளர் சிவமுருகன் தலைமையில் கொண்ட குழு புகார் வந்த கடைக்கு நேரடியாக சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு மாடி வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான கவர், ஸ்ட்ரா , பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததைக் கண்ட அதிகாரிகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடைக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்
இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொத்தேரி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.