அரசு பள்ளியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

69பார்த்தது
இந்திய நாட்டின் 78 வது சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகையினை வழங்கிய திருக்கழுக்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் சேகர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய நத்தம் கரியசேரி ஊராட்சி மன்ற தலைவரும் திருக்கழுக்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவருமான கரியச்சேரி சேகர் நத்தம் கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதுடன் 2023, 24 ஆம் ஆண்டு பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கும் அதனைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் ஊக்க தொகையினை வழங்கினார் நிகழ்ச்சியில் பேசிய ஊராட்சி மன்ற தலைவர் சேகர் சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவேன் என்றும் கல்வி மட்டுமே உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆகையால் மாணவ மாணவிகள் சிறப்புற கல்வி பயில வேண்டும் கல்விக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நான் தயாராக உள்ளன் என பேசினார் தொடர்ந்து சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி சாமிநாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவியருக்கு இனிப்புகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி