நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாநாட்டிற்கு இரண்டு தினங்களே இருக்கும் நிலையில், அதற்கான பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடக்கும் விஜய்யின் தவெக மாநாட்டில் பட்டாசு வெடிக்கக் கூடாது என காவல் துறை தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை அடுத்து தவெக தலைமை நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.