கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது...

54பார்த்தது
தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்த கூலி தொழிலாளிக்கு போக்சோ சட்டத்தில் கைது.


தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா தாளநத்தம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் அவரது மகன் நாகராஜ், 34, இவர் பெருங்களத்தூர் பகுதியில் வசித்து
வந்து, கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவர் இப்பகுதியில் கடந்த ஓராண்டாக தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகிறார். அவர் வசித்து வரும் வீட்டின் அருகில் 14 வயது நிரம்பிய
பள்ளி மாணவியை தொடர்ந்து சில மாதங்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நாளுக்கு நாள் சீண்டல்கள் அதிகமாகவே மாணவி பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர் கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மாலினியிடம்
புகார் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று, அங்கு இருந்த நாகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் அவர் தொடர்ந்து மாணவியிடம்
பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி