மதுராந்தகம் ஆர்டிஓ ஆபீஸ் முற்றுகை

76பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நெற்குணம் ஊராட்சியில் அடங்கிய வயலூர் கிராமத்தில் புதியதாக கல்குவாரி தொடங்குவதற்கான வேலைகள் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வருகிறது

இந்த புதிய கல் குவாரி அமைக்க கிராம மக்களிடம் எந்தவித முன் அறிவிப்பு இன்றி கல் குவாரி அமைக்க வேலை நடைபெற்று வருவதை அறிந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் இந்த கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்து இருந்தனர்

இதுவரை மாவட்ட நிர்வாகமும் வருவாய் துறையும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முற்பட்டனர்.

அப்பொழுது காவல்துறையினர் நீங்கள் எந்தவித முன் அனுமதி பெறாமல் நடத்தினால் உங்களை நாங்கள் கைது செய்ய நேரிடும் முறையான அனுமதி பெற்று நடத்துங்கள் என போராட்டத்தை கலைத்தனர் காவல்துறையினர்
இதன் காரணமாக கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜனிடம் மனு அளிக்க வந்திருந்தனர்
அப்பொழுது ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருவாய் கோட்டாட்சியர் நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி