கூடுவாஞ்சேரி அருகே மின் கம்பத்தில் வேலை பார்க்கும் போது இரண்டு ஒப்பந்த ஊழியர்கள் மீது மின்சாரம் தாக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நெல்லிக்குப்பம் திருப்போரூர் பிரதான சாலையில் இபி கம்பத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ஆகாஷ் என்கிற இரண்டு ஒப்பந்த ஊழியர்கள் கம்பத்தில் மேல் ஏறி நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது அப்போது அப்போது துடித்துடித்துக் கொண்டு கீழே விழுந்தனர். அப்போது மின்கம்பியில் உள்ள மின் ஒயர்களில் சிக்கி தொங்கும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
மின்சாரம் தாக்கிய 2 நபர்களையும் பொதுமக்கள் மீட்டு அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஒப்பந்த ஊழியர்கள் மீது மின்சாரம் தாக்கி கீழே விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.