சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்., 25) கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,295க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 58,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சமீப நாட்களாக தங்கம் விலை கடும் உச்சத்தை எட்டி நேற்று முன்தினம் ரூ.59,000-ஐ நெருங்கியது. இந்த நிலையில் இன்று மீண்டும் சற்று விலை உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.107க்கும், ஒரு கிலோ ரூ.107,000க்கும் விற்பனையாகிறது.