ஆலந்தூர் - Alandur

மாமல்லை பேரூராட்சி ஆபீஸில் பழைய நகரிய கல்வெட்டு அமைப்பு

மாமல்லை பேரூராட்சி ஆபீஸில் பழைய நகரிய கல்வெட்டு அமைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், கடந்த 1964 - 1994ல், நகரிய நிர்வாகமாக இயங்கியது. நகரிய நிர்வாக குழு, அன்றைய மாவட்ட கலெக்டரை தலைவராகவும், தொகுதி எம். பி. , - எம். எல். ஏ. , மத்திய, மாநில சுற்றுலா, தொல்லியல் உள்ளிட்ட துறையினர், உள்ளூர் பிரமுகர்கள் ஆகியோரை கொண்டு இயங்கியது. கடந்த 1994ல், சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகமாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, நகராட்சி நிர்வாகமாக தரம் உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், நகரியம் இயங்கிய காலத்தில் வைக்கப்பட்டு, பின்அகற்றப்பட்ட கல்வெட்டு, தற்போது திடீரென பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 1974ல், நகரிய அலுவலகம் கட்டுவதற்காக, கால்கோள் விழா நடத்தி, அதற்கான கல்வெட்டும் வைக்கப்பட்டது. தற்போதைய பேரூராட்சி அலுவலகத்திற்கு, கடந்த 2013ல் புதிய அலுவலகம் கட்டியபோது, முந்தைய நகரிய கல்வெட்டு அகற்றப்பட்டது. புதிய கட்டடத்தில், கடந்த 1996 முதல் தற்போது வரை, பேரூராட்சி குழுவினர் பெயர் பொறித்த கல்வெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முந்தைய நகரிய குழு உறுப்பினர் ஒருவர், தங்கள் பதவிக்கால கல்வெட்டையும் பொருத்துமாறு, பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம், 50 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டை, தற்போது அமைத்துள்ளது.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా