அதிமுக மகளிர் அணி நிர்வாகி மரணம்

67பார்த்தது
கழக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சகுந்தலா வயது 83 முன்தினம் நேற்று இரவு உடல்நிலை குறைவால் மறைந்தார்.

பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கு இணங்க அன்னாரது உடலுக்கு சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

1972 லிருந்து ஆயிரம் விளக்கு மகளிர் அணி செயலாளராக இருந்து படிப்படியாக முன்னேறி மாநில மகளிர் அணி துணைச் செயலாளராக உயர்ந்தார்.

50 வருடங்களாக கழகத்தில் தொண்டராக இருந்து பேச்சாளராகவும் செயற்குழு உறுப்பினராகவும் பல பதிவுகளில் இருந்து தற்போது மாநில மகளிர் அணி துணைச் செயலாளராக இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு உடல்நிலை குறைவாலும் வயது மூப்பு காரணமாக இறந்தார். நங்கநல்லூரில் வசித்து வந்த அவருக்கு சென்னை புறநகர் மாவட்டம் கழகம் கேபி கந்தன் மற்றும் கழக நிர்வாகிகள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி