சென்னையில் இன்று காலை முதல் மழை தொடங்கியது

65பார்த்தது
சென்னையில் இன்று காலை முதல் மழை தொடங்கியது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (அக்.18) அதிகாலை 2.25 மணி முதல் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று (அக்.17) முழுவதும் மழை பெய்யாத நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்கிறது. அதன்படி கோயம்பேடு, அம்பத்தூர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராயா நகர், மேற்கு மாம்பலம், ஆயிரம் விளங்கு, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி