விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

53பார்த்தது
தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இரவு சென்ற தனியார் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று இரவு அரசு முறை பயணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து எமிரேட்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

இதையடுத்து முதல்வர் மு க ஸ்டாலின் புறப்பட்ட சென்ற விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை விமான நிலைய அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

இந்த வெடிகுண்டு மிரட்டல் இமெயிலை முதல்வர் செல்லும் எமிரேட்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்ற பிறகுதான் அதிகாரிகள் பார்த்ததாக கூறப்படுகிறது, உடனே இது குறித்து விமான நிலைய போலீசார் மற்றும் கட்டுப்பாட்டறைக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றத்துடன் இருந்துள்ளார். இதையடுத்து இன்று அதிகாலை முதல்வர் சென்ற பயணிகள் விமானம் பாதுகாப்பாக துபாயில் தரையிறங்கியதாக தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் துபாயில் தர இறங்கிய விமானத்தில் திடீரென பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி