திருப்போரூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் சங்க தலைவராக தேவராஜ் தேர்வு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் உள்ளது.
இந்த நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் திருப்போரூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இதில், சங்கத் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர் என 7 பதவிகளுக்கான போட்டி நடைபெற்றது.
இதில், திருப்போரூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக தேவராஜ், செயலாளராக துரைமுருகன், பொருளாளராக வெங்கடேசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதேபோல், சங்கத்தின் துணைத் தலைவர்களாக பத்மநாபன், பஷீரா, இணை செயலராக கோபிகா ரமணன், நூலகர் மனோஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு சக வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆண், பெண் வழக்கறிஞர்களுக்கு பணி உடைமைகளை பாதுகாக்கவும், ஒய்வு எடுக்கவும் நீதிமன்ற மேல்தளத்தில் தற்காலிக அறையை தங்கள் செலவில் அமைத்துக்கொள்ள அனுமதி அளிக்குமாறு நீதிபதி அனுப்பிரியாவிடம் கோரிக்கை மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.