ஜி எஸ் டி சாலை மீனம்பாக்கத்தில் திடீர் பள்ளம்

77பார்த்தது
சென்னை மீனம்பாக்கத்தில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய மாநகர அரசு பேருந்து கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள்

சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து கிண்டி செல்லும் ஜிஎஸ்டி சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழியின் மூடி (திறப்பு மூடிகள்) சேதம் அடைந்து உடையும் தருவாயில் இருந்துள்ளது, இதனை கவனிக்காமல் வாகன ஓட்டிகள் சாலையில் வாகனங்களை இயக்கி வந்துள்ளனர்.

இந்தநிலையில் இன்று மீனம்பாக்கத்தில் இருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர அரசு பேருந்து ஒன்று சாலை நடுவே சேதமடைந்து இருந்த பாதாள சாக்கடை குழியின் மூடி மீது ஏறிய போது திடீரென உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு பேருந்தின் சக்கரம் பள்ளத்திலேயே சிக்கிக் கொண்டது.

இதையடுத்து ஓட்டுனர் பள்ளத்தில் சிக்கிய பேருந்தை மீட்க முடியாததால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழ் இறக்கப்பட்டு மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் இழுவை வாகனம் மூலம் மாநகர அரசு பேருந்து மீட்கப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

இதனால் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது இதையடுத்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் பள்ளத்திற்கு முன்பக்கம் பேரிக்கார்டுகள் அமைத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி