தமிழக மீனவர்கள் விடுதலை

80பார்த்தது
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்த விவகாரம் இரண்டு மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை இந்திய தூதரகத்தில் ஒப்படைத்த நிலையில் பத்திரமாக விமான மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 26 ஆம் தேதி டல்வின்ராஜ்(45) என்பவர்க்கு சொந்தமான விசைப்படகில் சுரேஷ்(49), வெள்ளைச்சாமி என்கிற முனியாண்டி (55), எமரிட்(49) ஆகிய நான்கு பேரும் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர்.

இதையடுத்து கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடிரென படகின் பக்கவாட்டில் பலகை உடைந்து கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் குதித்து கச்சத்தீவை நோக்கி நீந்தி சென்று உள்ளனர். இதில் டால்வின் ராஜ், சுரேஷ் ஆகிய இருவரையும் கச்சத்தீவில் இலங்கை கடற்பாரையினால் மீட்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இருவரையும் ஒப்படைத்தனர்.

மேலும் கடலில் மூழ்கி மாயமான சுரேஷ், வெள்ளைச்சாமி என்கிற முனியாண்டி ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடலை இலங்கை கடற்படை உதவி உடன் மீனவர்கள் தேடி மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்ட இரண்டு தமிழக மீனவர்களையும் விமானம் மூலம் தற்போது சென்னை அழைத்து வந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி