பெண்கள் டி20: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா

73பார்த்தது
பெண்கள் டி20: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா
பெண்கள் 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் துபாயில் நேற்று (அக்.17) நடைபெற்ற முதல் அரையிறுதியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது. ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தொடர்புடைய செய்தி