கூடுவாஞ்சேரி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு விருந்து...

82பார்த்தது
சென்னை கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வாக மூன்றாம் ஆண்டு தற்பொழுது நடைபெற்றது.

இதில் சிறந்து விளங்கிய தூய்மை பணியாளர்களுக்கு கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர்
எம். கே. டி கார்த்திக் அவர்கள் சிறந்த பணியாளருக்கான விருதை வழங்கினார். இதே போல் கடந்த ஆண்டு கன மழை பெய்த போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிறப்பாக பணியாற்றிய வார்டு கவுன்சிலருக்கும் நினைவு பரிசுகளை வழங்கினார்.

அப்போது பேசிய நகர மன்ற தலைவர் எம். கே. டி கார்த்திக் அவர்கள் ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு அம்மா யாரு அப்பா யாரு எப்படி பல் தேய்க்கணும் என்று தெரியாது இதனை அவர்களின் பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பார்கள். அதேபோல் கூடுவாஞ்சேரியில் உள்ள பொதுமக்கள் எல்லாம் குழந்தையாக இருந்து அவர்களுக்கு நமது தூய்மை பணியாளர்கள் குப்பைகளை எப்படி தரம் பிரிக்க வேண்டும் என்று அழகாக எடுத்துக் கூறுகிறார்கள் இதனால் கூடுவாஞ்சேரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எல்லோருக்கும் அவர்கள் அம்மா அப்பா தான் என்று புகழாரம் சூடினார்.


அதனைத் தொடர்ந்து சுட சுட அசைவ விருந்து வழங்கப்பட்டது. அப்போது தூய்மை பணியாளர்களுடன் கவுன்சிலர்களும் நகர மன்ற தலைவர்களும் சரிக்கு சமமாக அமர்ந்து அசைவ விருந்தை ருசித்து சாப்பிட்டனர்.!!

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி