தலைமறைவு குற்றவாளி கைது

78பார்த்தது
கேரள மாநில போலீசால், இணையதள மோசடி வழக்கில், தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளியான, கேரள மாநில இளைஞர், சென்னையில் இருந்து விமானம் மூலம், அபுதாபிக்கு தப்பிச் செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் கைது.

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஹிபத்துல்லா (24). இவர் மீது கேரளா மாநில போலீசில், இணையதளம் மோசடி வழக்கு பதிவாகி இருந்தது. ஆனால் இவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அதோடு ஹிபத்துல்லா, வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாகவும் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காசர்கோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, ஹிபத்துல்லாவை‌ தேடப்படும் தலை மறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல் ஓ சி போட்டு வைத்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் சோதனையில் பிடிபட்டார்

தொடர்புடைய செய்தி