திருக்கோவிலூர் - Tirukoilur

பெண் வார்டு உறுப்பினரை அடிக்க பாய்ந்த ஊராட்சி மன்ற தலைவர்

விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளம்புத்தூர் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த பெண் வார்டு உறுப்பினர் அஞ்சுகம். இவர் பஞ்சாயத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஆகியோருக்கு புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், வார்டு உறுப்பினர் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது இருவருக்கும் ஏற்பட்ட வார்த்தை போரில் செருப்பை கழட்டி கற்களால் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

வீடியோஸ்


விழுப்புரம்
ஆவணிப்பூரில் புதிய நுாலகம்: அமைச்சர் திறந்து வைப்பு
Sep 13, 2024, 16:09 IST/திண்டிவனம்
திண்டிவனம்

ஆவணிப்பூரில் புதிய நுாலகம்: அமைச்சர் திறந்து வைப்பு

Sep 13, 2024, 16:09 IST
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி. மு. க. , இளைஞரணி சார்பில், திண்டிவனம் சட்டமன்ற தொகுதி, ஆவணிப்பூரில் இன்று(செப்.13) கருணாநிதி நுாலகம் திறப்பு விழா நடந்தது. ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய தி. மு. க. , செயலாளர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ரமேஷ் முன்னிலை வகித்தார். அமைச்சர் மஸ்தான், கட்சி கொடியை ஏற்றி வைத்து, குத்துவிளக்கேற்றி நுாலகத்தை திறந்து வைத்தார். இதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சேகர், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்மாலிக், முன்னாள் எம். எல். ஏ. , க்கள் மாசிலாமணி, சீத்தாபதிசொக்கலிங்கம், சேதுநாதன், செந்தமிழ்செல்வன், தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாபு. அண்ணாமலை, விஜயகுமார், உதயகுமார், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் பழனி, தயாளன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.