டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் பிறந்தநாள் விழா

74பார்த்தது
டாக்டர் பாரிவேந்தர் பிறந்தநாளை ஒட்டி அன்னதானம் வழங்கிய விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் பிறந்தநாள் விழாவை ஒட்டி இந்திய ஜனநாயக கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விழுப்புரம் மத்திய மாவட்ட துணை செயலாளர் மனோ, வர்த்தக அணி செயலாளர் ரமேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் தகடி ஏழுமலை, கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் பொன்முடி, மகளிர் அணி நிர்வாகி தேவி பாலமுருகன், இலக்கிய அணி செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சிதம்பரநாதன், மதன், குபேந்திரன், மாவட்ட செயலாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி