விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பகுதியில் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று(டிச 4)அப்பகுதி அரசு தங்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கவில்லை என கோஷங்களை எழுப்பி மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். அப்பொழுது ஒருவர் பேசுகையில் தங்களுக்கு ஒரு லிட்டர் சாராயம் குடுங்கள், குடித்துவிட்டு இறந்து விடுகிறோம். அதன் பறிகாவத்து எங்களுக்கு 10 லட்சம் நிவாரண நிதி அப்பொழுதாவது தமிழக அரசு வழங்குமாயன ஆவேசமாக கேள்வி எழுப்பினார். போலீசாரின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் ஒரு மணி நேரம் விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.