விழுப்புரம் மாவட்டம், அறகண்டநல்லூர் அடுத்துள்ள, மணம்பூண்டியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு செயல் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மூர்த்தி வரவேற்றார். பொருளாளர் நடராஜன், துணை தலைவர்கள் விவேகானந்தா பள்ளி நிர்வாகி முருகன், ஓய்வுபெற்ற ஆசிரியர் சுப்பிரமணியன், தணிக்கையாளர் அப்பர்சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விவேகானந்தர் பள்ளியின் நிர்வாகி முருகன் பண்பாட்டுக் கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் பொதுச்செயலாளராக நல்லாசிரியர் அப்பர்சுந்தரம், பொருளாளராக நடராஜன், துணை தலைவர்களாக அறகண்டநல்லூர் மூர்த்தி, புலவர் சுப்பிரமணியன், கவிஞர் சிங்காரவேலுதியன், மற்றும் செயலாளராக ஆசைதம்பி மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.