திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டி பகுதியில் உள்ள தேவிகன் தெருவில் நல்லாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சத்யா பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காலை வேலைக்கு சென்ற பெண்ணை பின் தொடர்ந்த மர்ம நபர் அவர் வைத்திருந்த ஆயுதத்தால் குத்தி கொலை செய்து அங்கிருந்து தப்பியுள்ளார். தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் அவரை துரத்திச் சென்ற நிலையில் அவர் சென்ற கார் அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து கொலை செய்த நபரை போலீசார் பிடித்து முதல் சிகிச்சை உதவிக்கு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.