விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் ஆசிரியர் நகர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரும் வெள்ளம் ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை இதுவரை கண்டு கொள்ளவில்லை எனவும் ஆறுதல் கூற கூட யாரும் வரவில்லை எனவும் கூறி இன்று(டிச 06) விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.