ஒலக்கூர் அருகே சிறுவன் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
திண்டிவனம் வட்டம், ஓங்கூா், அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் கிஷோா்(16). இவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மேல்மருவத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு சிறுவன் கிஷோா் உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.