சங்கராபுரம்: மின் சாதன பொருட்கள் மின்னல் தாக்கி சேதம்
சங்கராபுரம் நகரில் இடி தாக்கியதில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள மின் சாதன பொருட்கள் சேதமடைந்தன. சங்கராபுரம் நகரில் நேற்று முன் தினம் (அக் 7 ) மாலை இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது பலத்த சத்தத்துடன் இடி தாக்கியது. இதில் சங்கராபுரம் நகரில் 25க்கும் மேற்பட்ட வீடுகளில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டி. வி. , மின் விசிறி, பிரிஜ்ட், லேப்டாப் போன்ற மின் சாதன பொருட்கள் மின்னல் தாக்கி சேதமடைந்தன.