
ஈரோட்டில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் கைது
சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற்னர். அதன்படி, ஈரோடு தாலுகா, பங்களாபுதூர், பவானிசாகர், பெருந்துறை, கருங்கல்பாளையம், ஆசனூர், அம்மாபேட்டை, கோபி, அந்தியூர், சத்தியமங்கலம் போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த ராயபாளையத்தை சேர்ந்த முருகன் (40), பங்களாபுதூர், உப்புபள்ளத்தை சேர்ந்த கந்தசாமி (58), பவானிசாகர், மறுவாழ்வு முகாமை சேர்ந்த தமிழ் செல்வன் (48), ராம நாதபுரம் மாவட்டம், மறையூரை சேர்ந்த அஜ்மீர் காஜா மொய்தீர் (30, பவானியை அடுத்துள்ள பெரியகுரும்பபாளையத்தை சேர்ந்த பிரசாத் (34), சென்னிமலை, வெப்பிலி பிரிவை சேர்ந்த வெள்ளிங்கிரி (41) உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 120 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.