மோகன்லால் நடித்துள்ள 'எம்புரான்' படத்திற்கு தடைகோரி வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி பிஜேஷுக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 'எம்புரான்' படத்தால் எங்கேயும் வன்முறை ஏற்பட்டுள்ளதா என நீதிமன்றம் பாஜக நிர்வாகியிடம் கேள்வி எழுப்பியுள்ளது. திரைப்பட தணிக்கைத்துறை சான்றிதழ் பெற்றிருந்தாலே அந்த படம் திரையிட தகுதி உடையதுதான். கோடைகால விடுமுறைக்குப் பின் வழக்கு விசாரிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.