பைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சிறப்பு பூஜை

62பார்த்தது
ஈரோட்டில் பிரசித்து பெற்ற தென்னக காசி பைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது இதில் திரைப்பட நடன இயக்குநர் கலா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திரைப்படத்தை பார்க்கக்கூடிய பார்வை நல்ல பார்வையாக இருந்தால் எதுவும் தவறாக தோன்றாது என திரைப்பட நடன இயக்குநர் கலா தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டைசுற்றிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற தென்னக காசி பைரவர் கோவில் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தின் நுழைவு வாசலில் உலகிலேயே மிக உயரமான 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட பைரவர் சிலை கொண்டது. இந்த ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் மூலவராக உள்ள சொர்ணலிங்க பைரவருக்கு பக்தர்களே பூஜைகள் செய்யலாம் என்பது தனிச்சிறப்பு.
இன்று தேய்பிறை அஷ்டமி தினம் முன்னிட்டு கால பைரவ ஆலயத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காலை முதல் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி