திமுக சார்பில் மொடக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்

68பார்த்தது
100 நாள் வேலை திட்டத்தை முடக்கவே ஒன்றிய அரசு நிதி் ஒதுக்காமல் இருப்பதாக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் குற்றச்சாட்டு.

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய 4000 கோடி ரூபாயை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய ஒன்றியங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுகவின் சார்பில் அவல்பூந்துறை நால் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். இதில் ஈரோடு எம்பி. , பிரகாஷ், மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ். எல். டி. சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய ஈரோடு எம்பி. , பிரகாஷ்,

100 நாள் வேலை திட்டம் கொண்டு வந்த நிலையில் இந்த திட்டத்தை முடக்க வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்காமல் இருக்கிறது. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று ஆறு காரில் மாறி மாறி சென்று அமித்ஷாவை சந்தித்து தனது உறவினர்கள் வீடுகளில் நடந்த சோதனையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என மட்டுமே பேசி உள்ளார். ஆனால் தமிழர்கள் நலன் குறித்து எதுவும் பேசவில்லை. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வழங்க வேண்டிய 4 ஆயிரம் கோடி ரூபாயை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று கூட பேசவில்லை. என இவ்வாறு பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி