பெரும்பாலான அசைவப் பிரியர்களின் முதல் தேர்வு சிக்கன் தான். இதை சாப்பிடுவதால் உடல் வெப்பம் அதிகரிக்கும் என்பதற்கு எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இல்லை. உணவு செரிமானம் ஆகும் போது சிறிதளவு வெப்பம் உற்பத்தி ஆகும். உங்கள் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க, வேகவைத்த, சுடப்பட்ட அல்லது கிரில் செய்யப்பட்ட சிக்கனை உட்கொள்வது சிறந்தது. கோடை காலத்தில் சிக்கன் அதிகளவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது தான்.