ஈரோடு மாவட்டம். பெருந்துறை வட்டம். திங்களூர் நடமாடும் மருத்துமனை குழு.
நேற்று சென்னிமலை தைப்பூச திருவிழாவிற்கு மருத்துவப் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது நான்கு வயது குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்க நிலையை அடைந்தார். அவருக்கு தக்க சமயத்தில் முதல் உதவிகளை செய்து டாக்டர் JV சவிஆர்த்தி, ஓட்டுநர் சதீஷ் மற்றும் உதவியாளர் சிவக்குமார் தக்க சமயத்தில் முதல் உதவிகளை செய்து குறித்த நேரத்தில் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அந்த சிறுவனின் உயிரை காப்பாற்றி உள்ளனர். இச்செயலை கண்டு பெற்றோர் மற்றும் பொது மக்கள் மற்றும் விழா குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.