ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள துலுக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் ராம் (28). இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது. இக்குழந்தைக்கு நேற்று காலையில் திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்த காய்ச்சல் மாத்திரையை தண்ணீரில் கரைத்து குழந்தைக்கு கொடுத்துள்ளனர். ஆனாலும், காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து, குழந்தையை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.