சென்னிமலை: கோயிலில் உண்டியல்கள் எண்ணும் பணி

54பார்த்தது
சென்னிமலை முருகன் கோவிலில் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது. ஈரோடு அறநிலையத்துறை உதவி ஆணையர் ரா. சுகுமார் தலைமையில், அறங்காவலர் குழு தலைவர் ஆர். பழனிவேலு, கோவில் செயல் அலுவலர் ஏ. கே. சரவணன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் நிரந்தர உண்டியலில் 25 லட்சத்து 57 ஆயிரத்து 73 ரூபாயும், திருப்பணி உண்டியலில் 42 ஆயிரத்து 786 ரூபாயும் காணிக்கையாக இருந்தது. இரு உண்டியல்களிலும் சேர்த்து மொத்தம் 25 லட்சத்து 99 ஆயிரத்து 859 ரூபாய் பக்தர்களின் காணிக்கையாக இருந்தது. மேலும் தங்கம் 78 கிராம் மற்றும் வெள்ளி 3,150 கிராமும் பக்தர்களின் காணிக்கையாக இருந்தது. 

இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மு. மனோகரன், வே. செ. பாலசுப்பிரமணியம், பெருந்துறை சரக ஆய்வாளர் ஸ்ரீ குகன், அயல் பணி ஆய்வாளர் சி. மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், அறச்சலூர் நவரசம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி