மனிதன் பறவையை கண்டான் விமானத்தை படைத்தான் என்கிறது வரலாறு. இந்நிலையில், விமானத்தின் எஞ்சின் ஒன்றில் சுமார் 30,000 அடி உயரத்தில் வாத்து ஒன்று உட்கார்ந்து பயணம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. அவ்வுளவு உயரத்தில் வாத்து விமானத்தில் பயணிக்க வாய்ப்பில்லை என சிலர் கூறினாலும், வியப்பை ஏற்படுத்தும் வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது AI தொழில்நுட்பத்தின் வீடியோவாக இருக்கலாம் என சொல்லப்பட்டாலும் 3 வாரங்களுக்கு முன்பு வெளியான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.