பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் வெடிகுண்டு மிரட்டல்

70பார்த்தது
பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே செயல்பட்டு வரும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று (ஜன. 22) வெடிகுண்டு மிரட்டல் ஆனது விடுவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைக்கப்பட்டு தீவிர சோதனையானது நடைபெற்று வருகிறது.

மருத்துவமனையின் டீன் மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி