குஜராத் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. பனஸ்கந்தா மாவட்டம் தீசா தொழிற்பேட்டையில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. தரைமட்டமான பட்டாசு ஆலையில் இருந்து மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு வெடித்ததை தொடர்ந்து தொழிற்சாலையில் இருந்த கட்டடம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.