பெருந்துறை - Perundurai

ஈரோடு: தி.மு.க. நிர்வாகி மகன் போக்சோவில் கைது

ஈரோடு: தி.மு.க. நிர்வாகி மகன் போக்சோவில் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த ஈங்கூர், செங்குளத்தை சேர்ந்தவர் சீனிவாசன். தி.மு.க. கிளை அவைத் தலைவர். இவரின் மகன் சுரேந்தர், 24; கோவையில் ஒரு தனியார் மில்லில் குவாலிட்டி இன்ஜினியராக உள்ளார். பெருந்துறையைச் சேர்ந்த, 15 வயது சிறுமியின் போட்டோவை மார்ப்பிங் செய்து ஆபாசமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.  இதுபற்றி சிறுமியின் பெற்றோர், பெருந்துறை போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சுரேந்தரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவையில் உள்ள மாவட்டச் சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా