பெருந்துறையில் தீ விபத்து: 6 வீடுகள் எரிந்து சேதம்

50பார்த்தது
பெருந்துறையில் தீ விபத்து: 6 வீடுகள் எரிந்து சேதம்

ஈரோடு அருகே பெருந்துறை பாரதி நகரில் வசித்து வருபவர் பொன்னுசாமி. கூலித் தொழிலாளியான இவர் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்று விட்ட நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் இவரது வீட்டில் இருந்து தீ பிடித்து புகை வர தொடங்கியுள்ளது. இதனை கண்ட பொது மக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவி, அவ் வீட்டை ஒட்டி இருந்த மற்ற வீடுகளுக்கும் தீப் பற்றியது
தகவலறிந்ததும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்டநேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 6 வீடுகளும், அவற்றில் இருந்த பொருட்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இது குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி