சென்னிமலை அருகே மாரியம்மன் கோவிலில் தானாகவே ஊஞ்சல் ஆடுவதால் பக்தர்கள் பரவசம்
சென்னிமலை அருகே மாரியம்மன் கோவிலில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது ஊஞ்சல் தானாகவே ஆடுவதால் பக்தர்கள் மத்தியில் பரவசம் ஏற்பட்டுள்ளது.
சென்னிமலை அருகே மேற்கு புதுப்பாளையத்தில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 12-ந் தேதி காலையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த கோவிலில் சித்தி விநாயகர், கருப்பண்ணசாமி, ஓம்பாயி மற்றும் செலம்பாயி ஆகிய சாமிகளுக்கு சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் மாரியம்மன் சன்னதிக்கு முன்புறம் ஊஞ்சல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊஞ்சல் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது தானாகவே ஆடுகிறது. பக்தர்கள் ஆட்டுவது போல் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேல் ஊஞ்சல் தானாக ஆடுவதால் பக்தர்கள் மத்தியில் பரவசம் ஏற்பட்டது.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ஊஞ்சல் உள்ள பகுதியில் காற்று வீச வாய்ப்பு இல்லாத நிலையில் கடந்த 2 நாட்களாக தானாகவே அவ்வப்போது தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேல் ஊஞ்சல் ஆடுவது அதிசயமாக உள்ளது என்றனர்.
இது பற்றி கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தில் உள்ள ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் மேற்கு புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று ஊஞ்சலை தொட்டு வணங்கி வருகின்றனர்.