ஈரோடு: 6000 பக்தர்களுக்கு அன்னதானம்..

71பார்த்தது
தை பொங்கலையொட்டி பழனி முருகப் பெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். அந்த வகையில் சேலம், எடப்பாடி, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் ஈரோடு வழியாக பழனிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். 

இவர்களுக்கு கருங்கல்பாளையத்தில் முருகப்பெருமான் அன்னதான சமூக சேவகர்கள் நல சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. 11ஆம் ஆண்டாக வழங்கப்படும் இந்த அன்னதானத்தில் இட்லி, ஊத்தாப்பம், குஸ்கா, தக்காளி சாதம், மீல்மேக்கர் பிரியாணி, காளான் பிரியாணி, கேசரி, மெதுவடை உள்ளிட்ட பலவகையான உணவுகளை பக்தர்களுக்கு வழங்கினர். விடியற்காலை முதல் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 6000 பக்தர்களுக்கும் மேல் அன்னதானம் பெற்றுச் சென்றனர். தொடர்ந்து வருடம் வருடமாக பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் நிகழ்ச்சி குழுவினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி