ராமேஸ்வரத்தில் வடமாநில பக்தர் உயிரிழப்பு

53பார்த்தது
ராமேஸ்வரத்தில் வடமாநில பக்தர் உயிரிழப்பு
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் கூட்டநெரிசலில் சிக்கி வடமாநில பக்தர் உயிரிழந்தார். தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜ்தாஸ் என்பவர் திடீரென சுருண்டு விழுந்தார். உடனே மீட்கப்பட்ட அவரை திருக்கோயில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் செய்வதறியாது கதறி அழுது வருகின்றனர். இந்த சம்பவம் 'அயோத்தி' படத்தின் காட்சிகளை நினைவுக்கு கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி