ஈரோடு வீரப்பன் சத்திரம் விநாயகா வித்யா பவன் பள்ளியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர் மற்றும் வயதானவர்கள் வரை வாக்களித்துக் கொண்டிருந்தபோது மத்திய பாதுகாப்பு படை வீரர்களிடம் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்று கூறியதற்கு இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 237 வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வீரப்பன்சத்திரம் விநாயகா வித்யாலயா பவன் பள்ளியில் பொதுமக்கள் முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வந்த நிலையில் மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் வாக்குச்சாவடி முகவரி செல்போன் கொண்டு வரக்கூடாது என கூறியதால் வாக்குச்சாவடி முகவருக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.