சென்னை கே.கே.நகரை சேர்ந்த மூர்த்தி (72) தனது மனைவி சாந்தி (61) என்பவருடன் தனியாக வசித்து வந்தார். இருவரும் உடல் நலப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மூர்த்தி நேற்று (மார்ச். 17) உயிரிழந்தார். அடுத்த சில நிமிடங்களில் சாந்தி தனது கணவர் மீது சாய்ந்த நிலையில் மரணித்தார். இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.