ஈரோடு நகரம் - Erode City

ஈரோடு ஜவுளி வார சந்தையில் தீபாவளி வியாபாரம்

ஈரோடு ஜவுளி வார சந்தையில் தீபாவளி வியாபாரம்

ஈரோடு மற்றும் திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் காட்டன் ஆடைகள், சேலைகள், லுங்கிகள், துண்டுகள், போர்வைகள், சுடிதார்கள், உள்ளாடைகள், ரெடிமேட் ஆடைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், உள்ளிட்ட ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், சூரத், புனே, மும்பை, அகமதாபாத் போன்ற வெளிமாநில பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சேலை ரகங்களும், குழதைகளுக்கான ரெடிமேட் ஆடைகள், சுடிதார் ரகங்களும் அதிகளவில் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வாராந்திர ஜவுளிச் சந்தையில் அனைத்து வகையான ஜவுளிகளும் விலை குறைவாக கிடைப்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்திய பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்து ஜவுளி மொத்தக் கொள்முதல் செய்து செல்கின்றனர். இதனால் வாரம் தோறும் நடைபெறும் இந்த ஜவுளி வார சந்தைக்கு தமிழ் நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் ஈரோடு சந்தைக்கு வந்து மொத்தமாக ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்து செல்வது வழக்கம். சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த இரண்டு வாரமாக ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా